தென்னிந்தியஇஷா அத்துல் இஸ்லாம் சபை


                அல்லாஹ்வின் அருளால் 1944ஆம் ஆண்டு திருநெல்வேலி மாவட்டத்தில் பல கிராமங்களிலும் உள்ள மக்கள் இஸ்லாத்தை தழுவிய போது அந்நவ் முஸ்லிம்களின் மார்க்கப் பிரச்சனைகளையும் வாழ்க்கைத் தேவைகளையும் கவனிக்கும் பொருட்டு திருநெல்வேலி தெ.இ.இஷா அத்துல் இஸ்லாம் சபை மர்ஹீம் மேடை முதலாளி ஆலி ஜனாப் மு.ந.அப்துர் ரஹ்மான் ஸாஹிப்

                 அவர்களால் ஆரம்பிக்கப்பட்டது.இச்சபை ஆற்றிய பல அரிய சாதனைகளை தென்னகமுஸ்லிம்கள் கண்டு பெருமிதம் அடைந்துள்ளனர் .அல்ஹம்துலில்லாஹ்.

                                 1958 ஆம் ஆண்டு சென்னை கிளை அல்லாஹ்வின் கிருபையால் உதயமாகி 55ஆண்டுகளாகச் செய்து வரும்பணிகள் சென்னை வாழ் முஸ்லிம்களின் இதயத்தில் இடம் பெற்றுள்ளன.