Wedmashwara : Services

1.புதன் மஷ்வரா:                       

                                          1983 மே மாதம் 31ஆம் தேதி நடைபெற்ற இஷாஅத் நிர்வாகக் குழுவின் தீர்மானப்படி, இஷாஅத் மற்றும் மத்ரஸ-யே-நிஸ்வான் சம்பந்தமானஅன்றாட அலுவல்களைக் கவனிக்கவும், இஷாஅத் செயற்குழு தீர்மானங்களை அமல்படுத்தவும்,அவசர பிரச்சனைகள் எற்பட்டால் தீர்வுகாணவும்,சமுதாயத்தின் பலதரப்பட்ட முறையீடுகளைக் கேட்டு,அதற்கு பரிகாரம் காணவும் ஒவ்வொரு புதன்கிழமைகாலை 8.00 மணி முதல் 9.00 மணி வரை சபை அலுவலகத்தில் நிர்வாகிகள் கூடிஆலோசனை செய்து வருகின்றனர்.

                             வெளியூர்களில் புதிதாக மதரஸாக்கள் ஏற்படுத்த அந்த மதரஸாக்களில் உஸ்தாதகள் தேவைப்பட்டால் அனுப்பி வைக்கவும் எற்பாடுசெய்யப்படுகிறது.மேலும் வெளியூர் மத்ரஸாக்களில் பிரச்சனைகள் ஏற்பட்டால்,அதைத் தீர்த்து வைக்க இங்கிருந்துதகுதியானவர்களை அனுப்பப்படுகிறது.

  • வேலைவாய்ப்பு

                                இமாமத் மற்றும் முஅத்தின் பணியை நாடி வருகைதருபவர்களுக்கு உதவிகள் செய்யப்படுகின்றன.

2.நிஸ்வான் மற்றும் மக்தப் வளரச்சித்துறை

                              நமது தாய் மத்ரஸாவின் கிளை என்ற பெயரில் தமிழ்நாட்டிலும்,வெளிமாநிலங்களில் மத்ரஸாக்கள் நடைபெற்று வருகின்றன.ஆனால் சரியான கண்காணிப்பு இல்லாததின் காரணமாக சில மத்ரஸாக்கள் மூடப்பட்டுவிட்டன.பல மத்ரஸாக்கள் தன்னிச்சையாகச் செயல்பட ஆரம்பித்து விட்டன.சிலவை நட்பு மத்ரஸாக்களாக மாரி ஆண்டில் ஒரு முறை பட்டமளிப்பு விழாவிற்கு மட்டும் நம்மை அழைக்க ஆரம்பித்தன.இதே நிலைதொடராமல் இருக்கவும்.நிஸ்வான் மத்ரஸாவுக்கென்றே உள்ள கட்டுப்பாடுகள் காப்பாற்றப்படவேண்டும் என்ற அடிப்படையில்.2009 நவம்பர் மாதம் 14ம் தேதி அன்று அனைத்து நிஸ்வான்களின்கண்காணிப்புப் துறைக்காக மௌலவி முஹம்மத் இப்ராஹீம் என்பவரை.பொறுப்பாளராக நியமிக்கப்பட்டது.இரண்டு உலமாக்கள் இவருடன் இயங்கி வருகிறார்கள்.

  • துறையல் செயல்பாடுகள்

1. பழையமத்ரஸாக்குடன் தொடர்பு ஏற்படுத்தப்பட்டது.

2. புதிதாகமத்ரஸாக்களை ஆரம்பிக்க முயற்சிக்கப்படுகிறது.

3. மத்ரஸாக்களில் உள்ள பிரச்சனைகளை தீர்த்து வைக்கப்படுகிறது.

4. மாதம் ஒருமுறையேனும் மத்ரஸாக்களைப் பார்வையிடப்படுகிறது.

5. அனைத்து மத்ரஸாக்களிலும் உஸ்தாதுகளைச் சேர்ப்பது,நீக்குவது,அவர்களின் விடுமுறை உட்பட அனைத்தும் தாய்நிஸ்வானிலிருந்து செயல்படுத்தப்படுகின்றன.

  • ஒரே பாடத்திட்டம்

             அல்லாஹ்வின் கிருபையால் அனைத்து மத்ரஸாக்களுக்கும் ஒரே படத்திட்டத்தை அனுப்பப்பட்டன.ஒவ்வொருமாதத்திற்கும் எவ்வளவு பாடம் நடத்துவது,எந்த கிதாப்களை எந்த மாத்தில்,எத்தனை பக்கங்கள்முடிப்பது போன்ற விஷயங்களும் அதில் அடங்கும்,மேலும் மாதாமாதம் பிறை 1ம் தேதியில் அனைத்து மத்ரஸாவிற்கும் அழைப்புகொடுத்து,அந்தபாடத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளனவா என்றும் கண்காணிக்கப்படுகிறது.

3.தீனிய்யாத் தர்பியத் மையம்(நவ்முஸ்லிம் துறை)    

        அல்லாஹ்வின் கிருபையால் பல ஆண்டுகாலமாக இஸ்லாத்தைத் தழுவும் ஆண்களுக்கும் பெண்களுக்கும்,தென்னிந்திய இஷா அத்துல் இஸ்லாம் சபையின்சார்பாக எவ்வித நிபந்தனைகளுமில்லாமல் சான்றிதழ்கள் வழங்கப்பட்டு வந்தன.காரணம்மக்கள் இஸ்லாத்தின் மதிப்பை உணர்ந்து அதில் நிலையாக இருக்க வேண்டும் என்று எண்ணிமுஸ்லிமானவர்கள் தான் அதிகம் ஆனால் சமீப காலமாக சிலர் இஸ்லாத்தின் மதிப்பைவிளங்கியும் விளங்காமலும் வேறு சிலர் தனது சுய நலன்களுக்காககவும் இஸ்லாத்தை தழுவதையும் அவர்கள் மார்க்கத்தில் கடைசி வரை பிடிப்பில்லாமல் இருப்பதையும் கருத்தில்  கொண்டு புதிதாக இஸ்லாத்தை விளங்கவும் மார்க்கத்தில் ஒரு படிப்பு உண்டாக வேண்டும் என்பதற்காக 2010 முதல் இவர்களுக்கு 120 நாட்கள்,40 நாட்கள்,25 நாட்கள்,20 நாட்கள்,3 நாட்கள் எனவும் பயிற்சி வகுப்புக்கள் நடத்த வேண்டும் என நிர்வாகம்  முடிவு எடுத்து அதன்பேரில் சபைக்கு சொந்தமான 37 மரைக்காயர் தெரு கட்டிடத்தில் இந்த வகுப்புகள் ஆரம்பிக்கப்பட்டன.

4.ஷரீஅத் பஞ்சாயத்துத் துறை

   சமுதயத்தில் ஏற்படும் பிரச்சனைகளை விசாரித்துசுமூகமாகத் தீர்த்துவைக்க 1992-ல் ஷரீஅத்பஞ்சாயத்துக் கமிட்டிநியமிக்கப்பட்டது.

     பரதி ஞாயிறு காலை 9.30 மணி முதல் 10.30 மணி வரை அங்கப்பன் தெரு மஸ்ஜிதே மஃமூரில்இந்தக்கமிட்டி கூடி அங்கு வரும் பிரச்சனைகளுக்குச் சுமூகமான தீர்வு காணுகிறதுசங்கைக்குரிய உலமாக்கள் மற்றும் வழக்கறிஞர்கள் சமுதாயப் பிரமுகர்கள் கொண்ட இந்தக்கமிட்டி சபையின் பொருளாளர் மரியாதைக்குரிய ஆலிஜனாப் அல்ஹாஜ் A.K.அப்துல் ஹலீம் சாஹிப் அவர்கள் தலைமையில்கீழ்க்கண்ட உலமாக்கள் மற்றும் பிரமுகர்கள் மௌலானா முஹம்மத் இலியாஸ் காசிமி, ஜனாப் ஹாஜி ஜபரூல்லாஹ் சாஹிப் B.A B.L , ஜனாப் அப்துல்ரஜாக் சாஹிப் B.A B.L  இதில்கலந்துக்கொள்வது குறிப்பிடதக்கது.

     இந்த ஆண்டு 16 மனுக்கள் விசாரிக்கப்பட்டு சமரச முயற்சிகள்மேற்கொள்ளப்பட்டு 13 மனுக்கள்சமாதானத் தீர்வு செய்யப்பட்டுள்ளன அல்ஹம்துலில்லாஹ்

  •  புதிய அலுவலகம்

                                          நமது பொறுப்பில் வாடகைக்காக எடுத்துள்ள ஈத்காபள்ளியின் கார்ஷெட்டை இந்த துறையின் அலுவலகமாக அமைத்து செயல்படுத்த ஆலோசிக்கப்பட்டு அதற்கான முயற்சிகளும் நடைபெற்று வருகின்றன.


5.பெருநாள் மற்றும் விசேஷ தொழுகைகள் துறை

                          சென்னை மெரினாகடற்கரையில் கடந்த 42 ஆண்டுகளாகநடைபெற்று வந்த பெருநாள் தொழுகைள் 2003 முதல் சென்னை தீவுத்திடல் நடைபெற்று வருகின்றன.

                      அல்லாஹ்வின்கிருபையால் இந்த ஆண்டும் இந்தத் தொழுகைகள் நடைபெற்றன.முஸ்லிம் பெருமக்கள் திரளாககலந்து கொண்டனர்.

                   ஈதுல் அழ்ஹா(பக்ரீத்) பெருநாளன்று மழைபொழிந்து தொழுகை விரிப்புகளும் நனைந்து போன போதிலும் உற்சாகத்துடன் அல்ஹம்துலில்லாஹ் தொழுகை நிறைவேற்றப்பட்டது இதற்கு உடலாலும் பொருளாளலும் உதவிசெய்த குறிப்பாக திரு.வி.க நகரை சேர்ந்த சகோதர்களுக்கு மற்றும்  இதற்கு பொருள் உதவி செய்து வரும் ஹாஜிமெஜஸ்டிக் அப்துல் கரீம் சாஹிப், சதக் டிரஸ்ட் நிறுவனத்திற்கு எல்லா  விதமான பரகத்களைதந்துருள்வான் ஆமின்.

 

6.தையல் பயிற்சித்துறை

                    1964-ல் இஸ்லாமிய பைத்துல்மால் மூலம்  ஆரம்பிக்கப்பட்ட தையல் பயிற்சிப்பள்ளி 11 மிஷின்கள் ஒரு ஆசிரியை மூலம் நடந்துவருகிறது.அதில் 2007 முதல் தேர்வுகள்நடத்தப்பட்டு சான்றிதழ்களும் வழங்கப்படுகின்றன.

    இந்த பள்ளியின் செயல்பாட்டைச்சீர்திருத்தவும்,தையல் தொழில்நிறுவனம் அமைக்கவும் கீழ்க்கண்ட இருநபர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.

1. ஆலிஜனாப் அல்ஹாஜ்P.S.M. சையத் அப்துல்காதிர் சாஹிப்,M.A B.L அவர்கள்

2. ஆலிஜனாப் அல்ஹாஜ்K.M அப்துல்ஜலீல் சாஹிப் (ஆர் எஸ் டிரஸ்ஸஸ்) அல்ஹம்துலில்லாஹ்,2010ஏப்ரல் முதல் 2011மார்ச் வரை 63 மாணவிகள் தையல்கலையில் தேர்ச்சி பெற்றதற்கானசான்றிதழ் பெற்றுச் சென்றுள்ளனர்